நய்யாண்டி படத்துக்காக பாடினார் தனுஷ்

[News Published On: Thu, Sep 5th, 2013 at 9:03 am]


தனுஷ், தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் நய்யாண்டி படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் இதற்கான ஒலிப்பதிவு அண்மையில் நடந்து முடிந்தது.

dhanush-in-dinamani

இதுவரை பாடிய பாடல்களிலிருந்து இந்த பாடல் முற்றிலும் வித்தியாசமாக பாடி இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ். அதேசமயம் ரசிகர்களுக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

சற்குணம் இயக்கி இருக்கும் இதில் நஸ்ரியா நசீம் ஹீரோயினாக நடிக்கிறார். காமெடியை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

- ஆசிரியர் சினிமா பகுதி
- படங்கள் நன்றி:தினமணி

Leave a comment

You must be Logged in to post comment.

-